ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட பொது நல வழக்குகள் மீது இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும், வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இது தொடர்பாக 14 வழிகாட்டுதல்களை வகுத்த நீதிபதிகள், ஆன்லைன் வகுப்பின் போது ஆபாச இணையதளங்கள் குறுக்கிட்டால் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் கொடுக்கலாமென உத்தரவிட்டு வழக்குகளை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.


0 Comments