திருநங்கையான மாமன் மகனுடன் இளைஞர் திருமணம்..! காதலில் விழுந்தவர்..!

 



திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் அலையும் இளைஞர்களுக்கு மத்தியில் திருநங்கையை காதலித்து கரம் பிடித்துள்ளார் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்.


2 வருடங்களுக்கு முன்பு திருநங்கையாக மாறிய மாமன் மகன் மீது காதல் கொண்டு மணம் முடித்த வினோதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.


காரியாபட்டி அருகே உள்ள வலையங்குளம் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறியுள்ளார்.


தனது பெயரை ஹரினா என்று மாற்றி கொண்டார். ஹரினாவுடன் அதே கிராமத்தை சேர்ந்த மாமன் மகனான 27 வயது கருப்பசாமி பழகி வந்துள்ளார்.


கருப்பசாமி டிரைவராக உள்ளதை காரணம் காட்டி பெண் வீட்டார் தட்டிக்கழித்து வந்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து திருநங்கையான மாமன் மகன் ஹரினாவை காதலித்து வந்துள்ளார்.


ஒரு கட்டத்தில் அவரையே திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளார். இதற்கு கருப்பசாமியின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் 90 கிட் கருப்பசாமி காதலில் உறுதியாக இருந்துள்ளார்.


இதையடுத்து இருவீட்டாரின் சம்மதத்தோடு காரியாபட்டி சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றது. இந்த திருமணத்தை திருநங்கைகள் அனைவரும் சேர்ந்து நடத்தி வைத்தனர்.


திருமணம் குறித்து மணமகன் கருப்பசாமி கூறுகையில், “நாங்கள் இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்ததாகவும் பெற்றோரை சமாதானப்படுத்தி காதலி ஹரினாவை திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தார்.


திருநங்கையை மணந்து கொண்ட கருப்பசாமியை அப்பகுதியினர் பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்

Post a Comment

0 Comments