அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 



தமிழகத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.


விண்ணப்பிக்கும்  பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்காத மாணவர்களுக்கு தகுதியுள்ள பிற பாடபிரிவுகளில் விதிமுறைகளைப் பின்பற்றி சேர்க்கை வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அனுமதிக்கப்பட்ட இடங்களை காட்டிலும் குறைவாக விண்ணப்பம் பெற்ற கல்லூரிகளில், மாற்று நடவடிக்கைகளை பின்பற்றி மீதமுள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டு எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  


கலந்தாய்வில் சுழற்சி 1-ல் இடம் கிடைக்காத மாணவர்களுக்கு, சுழற்சி 2-ல் வாய்ப்பு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments