செமஸ்டர் கட்டணம்.. கால அவகாசம் நீட்டிப்பு.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..
அண்ணா பல்கலைக்கழகம் ஆகஸ்டு மாதம் 5-ஆம் தேதி அன்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஆகஸ்டு 30-ஆம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தது.
மேலும், அந்த காலக்கெடுவுக்குள் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள், செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள்ளும், குறிப்பிட்ட சில படிப்புகளை படிக்கும் மாணவர்கள் 5-ஆம் தேதிக்குளளும் அபாராதத்துடன் சேர்த்து கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தது.
அவ்வாறு கட்டணம் செலுத்தவில்லை என்றால், மாணவர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் அதிரடியாக கூறியது.
இந்த அறிவிப்பால், மாணவர்கள் பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பி.இ., செமஸ்டர் கட்டணம் செலுத்த செப்டம்பர் 19ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
0 Comments