கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் கேரளா மீண்டும் முதலிடம்

 



நாட்டில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் கேரளா மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2017-2018ம் ஆண்டின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு விபரங்களின் அடிப்படையில் 96 புள்ளி 2 விழுக்காடு கல்வியறிவுடன், கேரளா மீண்டும் நாட்டின் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அதனையடுத்து டெல்லியும், மூன்றாவது இடத்தில் உத்தரகாண்டும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

கல்வியறிவில் பின்தங்கிய மாநிலங்களில் நாட்டின் கடைசி மாநிலமாக ஆந்திரா இருப்பதாகவும், அதற்கு முந்தைய இடங்களில் ராஜஸ்தான் மற்றும் பீகார் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments