தமிழகத்தில் மேலும் 5870 பேருக்கு கொரோனா... 61 பேர் பலி.
தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 58 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
நோய் தொற்றுக்கு ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 748 ஆக அதிகரித் துள்ளது. வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 859 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன்மூலம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 965 பேருக்கும், கோவையில் 545 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


0 Comments