சேலத்தில் வீட்டில் தீப்பிடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு.
சேலம் குரங்குசாவடி பகுதியில் நள்ளிரவில் வீட்டில் தீ பிடித்து எரிந்த விபத்தில் கணவன், மனைவி உள்பட 5பேர் உடல்கருகி பலியானார்கள்.
நகரமலை பகுதியில் வசித்து வந்த அன்பழகன் என்பவர் மரம் அறுவை மில் வைத்து உள்ளார். நேற்றிரவு வீட்டில் அன்பழகன் மற்றும் அவரது தம்பி குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 2 மணி அளவில் அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதை அறிந்த அனைவரும் உயிர் தப்ப முயற்சி செய்த போது அடர் புகை காரணமாக வெளியில் வர முடியவில்லை.
இதனால் வீட்டில் இருந்த கார்த்திக் , மகேஸ்வரி, முகேஷ் , சர்வேஷ், புஷ்பாஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். மற்றொரு அறையில் படுத்து இருந்த அன்பழகன் மற்றும் அவரது பெற்றோர் சேட்டு, அமுதா ஆகியோர் லேசான தீக்காயத்துடன் வெளியில் ஓடி வந்து உயிர் தப்பினர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது.


0 Comments