100 கிமீ ஓட்ட வெறும் 7 ரூபாய்! மிக குறைவான விலையில் மின்சார பைக்! எவ்ளோனு தெரிஞ்சா வாங்க துடிப்பீங்க
மிகவும் குறைவான விலையில் புதிய மின்சார பைக் ஒன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பணிகளை மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் முடுக்கி விட்டுள்ளன. மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், இந்தியாவிற்கு பெரும் தலைவலியாக இருந்து வரும் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு பிரச்னை குறையும்.
அத்துடன் மின்சார வாகனங்களின் மூலம் காற்று மாசுபாடு பிரச்னைக்கும் முடிவு கட்டப்படும். இதன் காரணமாகதான் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய, மாநில அரசுகள் அதிகரித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு தொடர்ச்சியாக பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் ஊக்கம் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டி கொண்டு இந்திய சந்தையில் மின்சார வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளன. முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்லாது, சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் தற்போது மின்சார வாகன சந்தையில் கால் பதிக்க தொடங்கியுள்ளன.
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் ஊக்கம் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டி கொண்டு இந்திய சந்தையில் மின்சார வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளன. முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்லாது, சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் தற்போது மின்சார வாகன சந்தையில் கால் பதிக்க தொடங்கியுள்ளன.
ஐதராபாத்தை சேர்ந்த இந்த நிறுவனத்திடம் இருந்து வெளிவரும் முதல் தயாரிப்பு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மலிவான விலை மற்றும் அட்டகாசமான சிறப்பம்சங்கள் மூலம் முதல் தயாரிப்பிலேயே அனைவரது கவனத்தையும் இந்த நிறுவனம் கவர்ந்து விட்டது. இது 'மேட் இன் இந்தியா' மின்சார பைக் ஆகும். தெலங்கானா மாநிலத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் ஆலையில் ஆட்டம் 1.0 உற்பத்தி செய்யப்படும்.
இந்த ஆலையில் ஒரு ஆண்டுக்கு 15,000 மின்சார பைக்குகளை உற்பத்தி செய்ய முடியும். தேவைப்பட்டால் இன்னும் 10,000 பைக்குகளை அதிகமாக தயாரிப்பதற்கான வசதிகளையும் அந்த ஆலை பெற்றுள்ளது. ஆட்டம் 1.0 மின்சார பைக்கானது, ஐசிஏடி-யால் (ICAT - International Centre for Automotive Technology) அங்கீகரிக்கப்பட்ட லோ-ஸ்பீடு மின்சார வாகனம் ஆகும்.
0 Comments