இந்தியாவின் ரஃபேல் VS சீனாவின் ஜே- 20... இந்த விமானங்கள் எந்த தலைமுறையை சேர்ந்தவை?

இந்தியாவின் ரஃபேல் VS சீனாவின் ஜே- 20... இந்த விமானங்கள் எந்த தலைமுறையை சேர்ந்தவை?


ஜே- 20 விமானத்தை ஐந்தாம் தலைமுறை விமானம் என்று இத்தனை நாளும் கூறி வந்த சீனா அதை நான்காம் தலைமுறை விமானமாக தர இறக்கம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2011- ம் ஆண்டு சீனா ஜே - 20 ரக போர் விமானத்தை தயாரித்தது. அமெரிக்காவின் எப் -22 மற்றும் எப் - 35 stealth ரக விமானங்களுக்கு இணையாக ஐந்தாம் தலைமுறை விமானம் இதுவென்று சீனா  கூறி வந்தது. ரஷ்யாவின் பழைய போர் விமானத்தின் இன்ஜீன்களை ஜே - 20 விமானத்தில் மாற்றம் செய்து பயன்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டு ஏற்கெனவே உண்டு.

தற்போது, பிரான்ஸ் நாட்டிடத்திலிருந்து இந்தியா ரஃபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளது. ரஃபேல் 4.5 தலைமுறை விமானமாக கருதப்படுகிறது. முதன்முறையாக சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை விட  நவீன தொழில்நுட்பங்களை கொண்ட போர் விமானம் இந்திய விமானப்படையில் உள்ளது.

இதனால், சீனா  அதி நவீன போர் விமானமாக கூறி வந்த ஜே-  20 ரக விமானத்தை நான்காம் தலைமுறை விமானமாக தரஇறக்கம் செய்து கொண்டு விட்டதாக சொல்லப்படுகிறது. சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் இப்போதெல்லாம் ஜே- 20 விமானம் குறித்து எழுதுகையில் நான்காம் தலைமுறை விமானம் என்றே குறிப்பிடுகிறது.

1940- ம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட விமானங்கள் முதல் தலைமுறை போர் விமானங்களாக கருதப்படுகிறது. பிரிட்டனின் Meteor மற்றும் அமெரிக்காவின் F-80 ரக விமானங்கள் முதல் தலைமுறை விமானங்கள் ஆகும். கொரிய போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அமெரிக்காவின் F-86 Sabre ரஷ்யாவின் MiG-15 and MiG-17 ரக விமானங்கள் இரண்டாம் தலைமுறையை சேர்ந்தவை. கொரியப் போர் முடிந்த பிறகு 1960- களில் அறிமுகமான MiG-21 அமெரிக்காவின் F-104 ரக விமானங்கள் மூன்றாம் தலைமுறையாக கருதப்படுகிறது.

1970- ம் ஆண்டின் போது அறிமுகமான அமெரிக்காவின் எஃப் -15 எஃப் -16, பிரான்ஸின் மிராஜ்- 2000 ரஷ்யாவின் சுகோய் -27 மிக் - 29 ரக விமானங்கள் நான்காம் தலைமுறை விமானங்கள். அதி நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமெரிக்காவில் எஃப் - 22 மற்றும் எஃப் - 35 ரக விமானங்கள் மட்டுமே தற்போது பயன்பாட்டிலுள்ள ஐந்தாம் தலைமுறை விமானங்கள் ஆகும். ரஷ்யாவின் சுகோய் எஸ்.யூ - 57 ரக விமானம் ஐந்தாம் தலைமுறை போர் விமானம்தான். ஆனால், இன்னும் ரஷ்ய விமானப்படையில் இணைக்கப்படவில்லை.

அதேவேளையில், ரஃபேல், யூரோஃபைட்டர் மற்றும் சுகோய்- 36 ரக விமானங்கள் 4.5 தலைமுறை விமானங்களாக நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால்,  ரஃபேல் விமானம் 3.5 தலைமுறை விமானம்தான் என்று சீன மீடியாக்கள் குறிப்பிடுகின்றன.


Post a Comment

0 Comments