தளபதி 65.. மாஸ் அப்டேட்டை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்.. ஆனால், அதை மட்டும் சொல்லல?
டோக்கியோ தமிழ் சங்கத்தின் ஃபேஸ்புக் லைவ்வில் கலந்து கொண்டு தற்போது பேசிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தொடந்து தளபதி விஜய்யுடன் டிராவல் செய்து வரும் பயணம் குறித்தும், விஜய் குறித்தும் ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தளபதி 65 படம் குறித்தும் அவர் மவுனம் கலைத்துள்ளார்.
கன்ஃபார்ம் தான்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஃபேஸ்புக் லைவ்வில் கொடுத்துள்ள பேட்டியிலும் அதனை மறுக்காமல், உறுதி செய்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். இதனால், தளபதி ரசிகர்கள்
4வது முறை
துப்பாக்கி படத்தில் தொடங்கிய ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணி தொடர்ந்து, கத்தி, சர்கார் என பிளாக்பஸ்டர் படங்களாக கொடுத்துள்ளது. இந்நிலையில், 4வது முறையாக ‘தளபதி 65' படத்திற்காக இந்த வெற்றி காம்போ மீண்டும் இணையவுள்ளது. விரைவில் வெறித்தனமான அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தியான நேற்று தளபதி 65 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என இரண்டு மூன்று நாட்களாகவே தளபதி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால், நேற்றும் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. சூரரைப் போற்று அப்டேட் வெளியான பிறகு மாஸ்டர் படத்தின் ஒடிடி ரிலீஸ் குறித்த பேச்சுவார்த்தைகள் டிரெண்டாகின.
என்ன சொன்னார் ஏ.ஆர். முருகதாஸ்
ஃபேஸ்புக்கில் ஏ.ஆர். முருகதாஸ் லைவ்வில் வருகிறார் என்றதுமே அனைத்து தளபதி ரசிகர்களும் ஆஜராகி விட்டனர். அவர்களின் ஒரே கேள்வி தளபதி 65 அப்டேட் தான். அது குறித்து பேசிய ஏ.ஆர். முருகதாஸ், பெரிய நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கும். அது குறித்து இப்போ என்னால் எதையும் சொல்ல முடியாது என்றார்.
சர்கார் ஷூட்டிங்கின் போது
மேலும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பார்கள், ஆனால், நீங்கள் மறுக்கவில்லையே என்ற கேள்விக்கு புன்னகையுடன் தளபதி 65 படம் இயக்குவதை ஒப்புக் கொண்டார் முருகதாஸ். மேலும், சர்கார் படத்தின் ஷூட்டிங்கின் போது, தளபதி விஜய் பைக்கில் ஏறி ஊர் மக்களுடன் செல்லும் காட்சியில், உண்மையாவே 1000 ரசிகர்கள் பைக்கோடு புகுந்து விட்டனர். அதில் இருந்து தப்பிக்க, தளபதி விஜய் பைக்கை நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டே சென்றார். என்னடா ஃபிரேமை விட்டு செல்கிறாரே என பார்க்கும் போது தான் விஷயமே புரிந்தது அவரை மீட்க போராடினோம் என்ற எக்ஸ்க்ளூசிவ் தகவலையும் கூறியுள்ளார்.



0 Comments