SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. இதன் படி உங்கள் டெபிட் கார்டு மூலம் இனி நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய முடியாது என்று SBI தெளிவாகக் கூறியுள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை விளக்கமாகப் பார்க்கலாம்.
SBI கணக்கு வைத்திருப்பவரின் டெபிட் கார்டுடன் இந்த சேவை தற்பொழுது நிறுத்தப்படுகிறது என்று SBI வங்கி தெரிவித்துள்ளது. சரியாகச் சொன்னால், இனி உங்களுடைய SBI டெபிட் கார்டு இ-காமர்ஸ் வலைத்தளங்களில் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டை ஒருபோதும் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களிடமிருந்து இந்த வசதி திரும்பப் பெறப்படுவதாக SBI தெரிவித்துள்ளது.
SBI டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும் என்று வங்கி தனது அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருப்பவரின் டெபிட் கார்டில் பணம் எடுக்கும் சேவை போக, அட்டை இடமாற்று மூலம் பணம் செலுத்தும் பேமெண்ட் சேவை போன்று பல சேவைகளும் வழங்கப்படுகிறது.
ஒருவேளை வங்கி உங்களுடைய ஆன்லைன் சேவையை நிறுத்திவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் டெபிட் கார்டுடன் வங்கி வசதியை நிறுத்தினால், அதை மீண்டும் தொடங்க உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து 'swon ecom 0000' டைப் செய்து 09223966666 எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பவும். டெபிட் கார்டின் கடைசி நான்கு இலக்க எண்களை 0000 பதிலாக உள்ளிட வேண்டும்.
வாடிக்கையாளர் எஸ்எம்எஸ் செய்த பிறகு, உங்கள் டெபிட் கார்டு அட்டைக்கான ஆன்லைன் ஷாப்பிங் சேவை தொடங்கப்படும். இதற்காக நீங்கள் வங்கியின் வலைத்தளமான onlinesbi.com வலைத்தளத்திற்கு செல்லலாம். சமீப களங்களில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதனால் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி இ-காமர்ஸ் சேவைகளை ரத்து செய்துள்ளது என்று SBI தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் சந்தேகங்களுக்கு அருகில் வங்கி கிளையைத் தொடர்புகொள்ளுங்கள்.
0 Comments