டிக்டாக் நிறுவனத்தை விற்பனை செய்ய சீன நிறுவனத்துக்கு அவகாசம் வழங்கிய ட்ரம்ப்

டிக்டாக் நிறுவனத்தை விற்பனை செய்ய சீன நிறுவனத்துக்கு அவகாசம் வழங்கிய ட்ரம்ப்



டிக்டாக் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் விற்பனை செய்ய, அதன் உரிமையாளரான சீன நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 45 நாட்கள் அவகாசம் அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதெள்ளா, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, டிக்டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது.

செப்டம்பர் 15க்குள் இது குறித்த ஒப்பந்தந்தை இறுதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. டிக்டாக்கை தடை செய்வதில் உறுதியாக இருந்த ட்ரம்பின் நிலைப்பாட்டை மாற்றிய காரணி குறித்த தகவலேதும் வெளியாகாத நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலை கருத்தில் கொண்டு முடிவை மாற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் டிக்டாக்கை விற்பதற்கு அதன் உரிமையாளரான பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு அதிபர் ட்ரம்ப் 45 நாள் அவகாசம் வழங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Post a Comment

0 Comments