ஓசூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

 ஓசூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி



கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர்.


நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக தெருக்களில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு தடை விதித்தது.


எனினும் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிப்படலாம் என்றும் அவ்வாறு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம் என அரசு அறிவித்தது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் சூளகிரி அடுத்த அனாசந்திரம் ஏரியில் கரைக்கப்பட்டன.


அப்போது நீச்சல் தெரியாத சூளகிரியை சேர்ந்த முரளி (12), பூபதி(13) ஆகிய இருவர் விநாயகர் சிலையை கரைக்க ஏரியில் இறங்கியபோது மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவர்களின் சடலத்தை மீட்டனர்.


Post a Comment

0 Comments