செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!
அக்டோபர் 28 முதல் நவம்பர் 9 வரை, செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் எனவும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 12 ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள பொறியல், தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் வரும் 12 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 26 வரை நடைபெறும் எனவும், அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் டிசம்பர் 14ம் தேதி தொடங்கும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் அக்டோபர் 26 வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்; அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் டிசம்பர் 14ம் தேதி தொடங்கும் - அண்ணா பல்கலைக்கழகம்
அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு முதலாமாண்டு மாணவர்களை தவிர்த்து அனைத்து இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும்.


0 Comments