நாளை முதல் தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம்.. பேருந்தில் செல்ல என்னென்ன கட்டுப்பாடுகள்.. விவரம்



நாளை முதல் தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம்.. பேருந்தில் செல்ல என்னென்ன கட்டுப்பாடுகள்.. விவரம்



தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நிறுத்திவைக்கப்பட்ட பேருந்து போக்குவரத்து நாளை முதல் தொடங்குகிறது. பேருந்தில் பயணிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகாரிகளை விதித்துள்ளனர்.


தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை நாளை (1.09.2020) முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.


இதன்படி மாவட்டத்திற்குள் இயக்கப்படும் பேருந்துகளில் பயணிக்க என்னென்ன வழிகாட்டு நடைமுறைகள் என்பது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார்.


தனிநபர் இடைவெளி

இது குறித்து அவர் கூறுகையில், அரசு உத்தரவுப்படி நாளை முதல் பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படும். பேருந்துகளில் அதிகபட்சமாக மொத்த இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்ப்படுவர். பயணிகள் இருக்கை மற்றும் நிற்பதற்கான இடங்களில் தனிநபர் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்படும்.


பின்புற வழி

பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு பின்புற வழியையும், இறங்குவதற்கு முன்புற வழியையும் பயன்படுத்துவதற்கும் உடல் ரீதியான தொடர்புகளை தவிர்க்க அறிவுறுத்தப்படும்


மாஸ்க் கட்டாயம்

ஒவ்வொரு முறை பேருந்து இயக்கத்திற்கு பிறகு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். மாஸ்க் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்தில பயணிக்க பயணிகள் அனுமதிக்கப்படுவர். பேருந்தில் ஏறி இறங்கும் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்


சானிடைசர் வழங்கப்படும்

அனைத்து பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் தங்களது பணியை துவக்கும் முன்பு தினசரி உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்.


மேலும் முகக்கவசம், சானிடைசர் ஆகியவை அவர்களுக்கு வழங்கப்படும். பயணிகள் சானிடைசர் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்காவும் பேருந்தில் சானிடைசர் வைக்கப்படும்" இவ்வாறு கூறினார்.


Post a Comment

0 Comments