சாதித்த நாசா ஸ்பேஸ்எக்ஸ்.. பூமிக்கு திரும்பிய விண்வெளியில் வீரர்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி
நியூயார்க்: அமெரிக்கவின் விண்வெளி அமைப்பான நாசா (NASA) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) ஆகியவை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) நாசா விண்வெளி வீரர்களான ராபர்ட் பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஹர்லி ஆகியோரை பூமிக்கு அழைத்து வந்துள்ளன. இருவரும் வெற்றிகரமாக வந்திறங்கியதை நாசா கொண்டாடி வருகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஸ்பேஸ்எக்ஸின் புதிய க்ரூ டிராகன் மூலம் கடந்த மாதம் அமெரிக்க விண்வெளி வீரர்கள் பாப் பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஹர்லி ஆகியோர் பறந்தனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS-ல்) இரண்டு மாதங்களுக்கும் மேலாக தங்கி ஆராய்ச்சி செய்து வந்த ராபர்ட் பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஹர்லி ஆகியோர் அங்கிருந்து புதிய க்ரூ டிராகனில் சனிக்கிழமை பூமிக்கு புறப்பட்டனர். சுமார் 21 மணி நேரத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 3 ஆம் தேதி அதிகாலை இருவரும் மெக்ஸிகோவின் புளோரிடாவின் பென்சாக்கோலா கடற்கரையில் கடல் அலைகளில் தரையிறங்கி வீடு திரும்பினர்.
புயல் காரணமாக விண்வெளி ஓடத்தின் பயணம் தடைபடாமல் இருக்க நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவன விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்தனர். 10 ஆண்டுகளுக்கு பின்னர் 2 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வந்துள்ளது.


0 Comments