மாஸ்க், சானிடைசர் கட்டாயம்.. சமூக இடைவெளி அவசியம்.. நீட் தேர்வுக்கு புதிய ரூல்ஸ் அறிவிப்பு!

 மாஸ்க், சானிடைசர் கட்டாயம்.. சமூக இடைவெளி அவசியம்.. நீட் தேர்வுக்கு புதிய ரூல்ஸ் அறிவிப்பு!


செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில், நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது


நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1-6 வரையும் நடக்கும் என்று தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. பொதுவாக நீட் தேர்வுகளின் போது மாணவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். நீட் தேர்வுகள் கொரோனா பாதிப்பிற்கு இடையே நீட் தேர்வு நடக்க உள்ளது.


இதனால் இந்த முறை தேர்வு தொடர்பாக கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு ஆணையம் விதிமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், தேர்வு அறையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும். மாணவர்கள் தனி தனி இருக்கையில் அமர வைக்கப்படுவார்கள். ஒரு பெஞ்சில் ஒருவர் மட்டுமே அமர வைக்கப்படுவார்.


நீட் தேர்வு எழுதும் அறையில் ஒரு அறைக்கு 12 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முன்பு 24 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 12 பேர் மட்டுமே ஒரு அறைக்குள் செல்ல முடியும். மாணவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம். மாணவர்கள் எல்லோரும் தண்ணீர் பாட்டில் மற்றும் சானிடைசர் கொண்டு வருவது கட்டாயம். கொரோனா காலம் என்பதால்., தேர்வு அறைக்கு மாணவர்கள் முன்பே வந்துவிட வேண்டும். தேர்வு அட்மீட் கார்டில் கொரோனா தொடர்பாக இருக்கும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மத ரீதியான உடைகளை அணியும் மாணவர்கள், மாணவிகள் தேர்வு அறைக்கு முன்பே வந்து உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.


Post a Comment

0 Comments