விரைவில் இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணை - அமைச்சர் கே.பி.அன்பழகன்

 

விரைவில் இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணை - அமைச்சர் கே.பி.அன்பழகன்



இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இறுதி செமஸ்டர் தேர்வுகளை  கட்டாயம் நடத்த  வேண்டும் என்ற  உச்ச நீதிமன்ற  தீர்ப்பின் அடிப்படையில்,  தேர்வுகளை விரைவில் நடத்த  முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில், தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாமா என்பது குறித்து உயர்கல்வித்துறை அதிகாரிகள், துணைவேந்தர்களின் கருத்துக்களை கேட்ட பின் அது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அரசுக்கு அறிக்கை தர, உயர்கல்வி செயலாளர் தலைமையில்  குழு அமைக்கப்பட உள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments