குஷ்புவே உன் பெயர் சர்ச்சையா? - அமித்ஷாவை அடுத்து ஆளுநர் குணமடையும் வாழ்த்தினார்

குஷ்புவே உன் பெயர் சர்ச்சையா? - அமித்ஷாவை அடுத்து ஆளுநர் குணமடையும் வாழ்த்தினார்

நடிகையும் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பானருமான குஷ்பு புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பதிவிட்ட ட்வீட்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குணமடைய வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டு புதிய புயலை கிளப்பியுள்ளார். இவரது பதிவிற்கு எதிராக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

மித்ஷா குணமடைய வாழ்த்து முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடையவேண்டும் என்று வாழ்த்தியிருந்தார் குஷ்பு. இதனைப்பார்த்த பலரும் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்று கூறி கிண்டலடித்திருந்தனர்.


கீழ்ப்பாக்கம் மருத்துவமனை அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக என பயணப்படுகிறார் குஷ்பு அடுத்து எங்கே மென்டல் ஹாஸ்பிடலா என்று கேட்டிருந்தார் ஒருவர். அதைப்பார்த்த குஷ்பு பதிலடி தரும் விதமாக, நான் வேணும்னா உங்களுக்கு கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் ஒரு பெட் புக் பண்ணட்டுமா என்று கேட்டிருக்கிறார். இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி சர்ச்சை ட்வீட்களைப் போட்டு அரசியல் செய்யப் போகிறாரோ குஷ்பு


சர்ச்சையாகும் கருத்துக்கள்

 திமுகவில் இருந்த போது கட்சி தலைவர் பற்றிய பேச்சு எழுந்த போது ஸ்டாலினுக்கு எதிராக கருத்து சொல்லி அந்த கட்சி தொண்டர்களின் வெறுப்பை சம்பாதித்தார். பின்னர் திமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு அங்கிருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் குஷ்பு. சாதாரணமாக குஷ்பு பேசுவதெல்லாம் சர்ச்சையாகிறதா? அல்லது சர்ச்சையாக வேண்டும் என்பதற்காக குஷ்பு பதிவிடுகிறாரா? தெரியலையே.

Post a Comment

0 Comments