பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு!

 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு!



பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. 

இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசின் தேர்வுகள் இயக்குநரகம், இன்று காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

இதற்காக www.tnresults.nic.in என்ற இணையதளம் வழியாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ள முடியும் என தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பிக்கப்பட்ட கைபேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவு அனுப்பப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, வரும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரையிலான நாட்களில் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments