வேதனை! ஒரே நாளில் புதிதாக நோய் தொற்று பாதித்த நாடுகளில் இந்தியா முதலிடம்.. அமெரிக்காவுக்கு 2வது இடம்
வாஷிங்டன்: உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.8 கோடியை தாண்டியது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 6.96 லட்சமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலகளவில் இதுவரை 1,84,34,271 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கையோ 7 லட்சத்தை நெருங்குகிறது. அதாவது 6.96 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 1,16,64,772 ஆகும். ருத்துவமனைகளில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 64,732 ஆகும். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48 லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது 48,61,562 ஆகும். இங்கு புதிதாக 48,010 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை இங்கு இறந்தோரின் எண்ணிக்கை 1.58 லட்சமாகும்.
பிரேசிலில் 27 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு 17,988 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 18 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு 50,629 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 38,971 பேர் பலியாகியுள்ளனர்.
0 Comments