29 முக்கிய வீரர்கள் இல்லாமல் துவங்கும் ஐ.பி.எல் தொடர்; அதிர்ச்சியில் ரசிகர்கள் !!
29 முக்கிய வீரர்கள் இல்லாமல் துவங்கும் ஐ.பி.எல் தொடர்; அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஐ.பி.எல் தொடரின் முதல் வாரத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் மார்ச் மாதம் இறுதியிலிருந்து இங்கு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் வீரர்கள் எங்கேயும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கிரிக்கெட் பயிற்சி முகாம்கள் நடத்துவதற்குக் கூட மத்திய மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் வீட்டிலேயே கிரிக்கெட் வீரர்கள் முடங்கிக் கிடந்து அங்கேயே பயிற்சியை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது.
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டது. அதனால் ஐந்து மாத காலத்திற்கும் மேலாக தடைபட்டிருந்த ஐபிஎல் தொடர் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்த தொடருக்காக காத்திருக்கும் நிலையில், இந்த தொடர் நடப்பதில் நாளுக்கு நாள் சிக்கல்களும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
தென் ஆப்ரிக்கா, விண்டீஸ் வீரர்களின் வருகை ஏற்கனவே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், தற்பொழுது ஐ.பி.எல் தொடரின் முதல் வாரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையில் தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 4-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் இரண்டு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் முதல்வார ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்து.
ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், ஜாஃ.ப்ரா ஆர்சர், பென் ஸ்டோக்ஸ், அண்ட்ரூ டை, டாம் கர்ரன் என ராஜஸ்தான் அணியின் மிக முக்கிய வீரர்களின் வருகை தாமதமாவது மற்ற அணிகளை விட ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மற்ற அணிகள் மற்றும் வீரர்களின் விபரம் பின்வருமாறு;
சென்னை சூப்பர் கிங்ஸ் – ஜோஷ் ஹசில்வுட், சாம் கர்ரன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பேட் கம்மின்ஸ், மோர்கன், டாம் பாண்டன்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் ; வார்னர், பேர்ஸ்டோவ், மிட்செல் மார்ஷ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – மொயீன் அலி, ஆரோன் பிஞ்ச், ஜோசுவா பிலிப், கேன் ரிச்சர்ட்சன்
டெல்லி கேப்பிட்டல்ஸ் – ஜேசன் ராய், அலேக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டாய்னிஸ்
கிங்ஸ் லெவன பஞ்சாப் – கிளன் மேக்ஸ்வெல்
மும்பை இந்தியன்ஸ் – யாரும் இல்லை


0 Comments