தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையில் வரும் 17 ஆம் தேதி முதல் தளர்வுகள் அறிவிப்பு
தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன், தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் இ பாஸ் அனுமதி எவ்வித தாமதமும், தடையும் இன்றி உடனுக்குடன் விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்த முடிவை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி, தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ பாஸ் விண்ணப்பித்து பெற்று பயணிக்க அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 Comments