இப்படி போனா எப்படி பொது முடக்கம் ரத்தாகும்? - கொரோனா Update
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் பாதிப்பு மட்டுமல்லாமல் பலி எண்ணிக்கையும் மிக அதிகமாகியுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த மூன்று தினங்களாக பாதிப்பு ஏழாயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னைக்கு அடுத்தப் படியாக விருதுநகரில் அதிக பாதிப்பு நேற்று பதிவாகியுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு, பலி, தடுப்பு நடவடிக்கைகள், பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா, விலக்கிக் கொள்ளப்படுமா உள்ளிட்ட முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் இங்கு பார்க்கலாம்.
*தமிழகத்தில் நேற்று மட்டும் 6,972 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.
*சென்னையை பொறுத்தவரை நேற்று மட்டும் 1107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 96,438ஆக அதிகரித்துள்ளது.
*நேற்று ஒரே நாளில் மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 3,659 ஆக உயர்ந்துள்ளது.
*நேற்று மட்டும் 4,707 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,66,956 ஆக உயர்ந்துள்ளது.
0 Comments