தயாராகிறது நவீன மென்பொருள் - இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே செமஸ்டர் தேர்வு

தயாராகிறது நவீன மென்பொருள் - இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே செமஸ்டர் தேர்வு


செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த மென்பொருள் வடிவமைப்பிற்கு அண்ணா பல்கலைக்கழகம் டெண்டர் கோரியுள்ளது.

கொரோனா பரவலால் இறுதியாண்டு தவிர்த்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நவீன மென்பொருள் உதவியுடன் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுபாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வினை ஆன்லைனில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கணினி முன்பு ஆன்லைன் தேர்வுக்கு அமரும் மாணவர்கள் அமர்ந்துள்ள அறை மாணவரை தவிர்த்து வேறு நபர்கள் உள்ளனரா? என்பன உள்ளிட்டவற்றை மொத்தமாக  கண்காணிக்கும் வகையிலான மென்பொருள் உதவியுடன் தேர்வு நடத்தப்பட உள்ளது.

மேலும் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு சமயத்தில்  முறைகேடுகளில் ஈடுபடுவதை மென்பொருள் உதவியுடன் தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த மென்பொருளுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு பொறியல் மாணவர்களுக்கு இந்த மென்பொருள் மூலம் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.


Post a Comment

0 Comments