60 வயது பெண் மூலம் 200 பேருக்கு கொரோனா

60 வயது பெண் மூலம் 200 பேருக்கு கொரோனா

நீலகிரி மாவட்டம் உதகையில் 60 வயது பெண்ணால் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதோடு 8 கிராமங்களில் பரவி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

In the Nilgiris district, the incidence of corona infection rose ...

இத்திருமணத்தில் கோவையிலிருந்து வந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் கலந்து கொண்டார். இதற்கிடையில் காய்ச்சலோடு வந்த அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை சுகாதாரத் துறையினர் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அந்த பெண் தனக்கு சோதனை செய்ததை மறைத்து திருமணம் மற்றும் முள்ளிக்கூர் கிராமத்தில் ஏற்பட்ட துக்க நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளார்.

இதற்கிடையே பரிசோதனை முடிவில் அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சுகாதாரத் துறையினர் அவசர அவசரமாக அப்பெண்ணின் தொடர்புகளை தேடிப் பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
அதில் திருமணத்தில் கலந்து கொண்ட 190 பேருக்கு கொரோனா தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தங்காடு ஒரநள்ளி கிராமமே அச்சத்தில் உறைந்து போனது. இந்நிலையில் கொரோனாவை பரப்பிய பெண் உட்பட இரண்டு பேர் தொற்றுக்கு பலியாகினர்.

இதற்கிடையில் அந்த திருமணம் மற்றும் துக்க நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் 8 கிராமங்களுக்கு சென்றதால் அந்த கிராமங்களிலும் தொற்று பரவி எண்ணிக்கை கூடியது. இதனை அடுத்து ஆட்சியரின் கடும் நடவடிக்கை காரணமாக கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனாவால் 200பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Post a Comment

0 Comments