5 வயது பெண் குழந்தை, 3 வயது மற்றொரு பெண் குழந்தை உள்பட, இதுவரை இல்லாத வகையில், 97 பேர்,கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் இன்று

தமிழகத்தில், புதிதாக 5 ஆயிரத்து 864 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இவர்களில், 53 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள். இதுவரை,கொரோனா வால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்து 40 ஆயிரத்தை எட்டி உள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து, ஒரே நாளில் 5  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அரியலூரைச் சேர்ந்த 5 வயது பெண் குழந்தை,  3 வயது மற்றொரு பெண் குழந்தை உள்பட, இதுவரை இல்லாத வகையில், 97 பேர்,கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

சென்னையில் புதிதாக ஆயிரத்து 175 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 354 நபர்களுக்கும், திருவள்ளூரில் 325 பேருக்கும், கோவையில் 303 நபர்களுக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுதவிர, திருநெல்வேலியில் 277 பேரும், ராணிப்பேட்டையில் 272 நபரும், தேனியில் 261 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்


Post a Comment

0 Comments