வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 40 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை..!

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 40 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை..!


சென்னையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள தங்கம் விலை, சவரன் 40 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது.

சமீப காலங்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது. ஊரடங்கால் தங்க நகை விற்பனை முடங்கியிருந்தாலும், பங்குச்சந்தைகளில் நிலவிய ஸ்திரமற்ற சூழலால் முதலீட்டாளர்களும் தங்கத்தை நாடத் தொடங்கினர்.

தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததன் எதிரொலியாக, தங்கம் விலை கிடுகிடுவென உயரத்துவங்கியது. இந்நிலையில், நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 109 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 13 ரூபாய்க்கும், சவரனுக்கு 872 ரூபாய் அதிகரித்து 50 ஆயிரத்து 104 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோ ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.


Post a Comment

0 Comments