பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு.. எப்படி பார்ப்பது விவரம்

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு.. எப்படி பார்ப்பது விவரம்


சென்னை: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை செல்போனில் குறுஞ்செய்தி வாயிலாகவும்,



www.tnresults.nic.in, https://dge1.tn.nic.in/ , http://dge2.tn.nic.in/ ஆகிய இணையதள முகவரி வாயிலாகவும் முடிவுகளை அறியலாம்.

தங்களுடைய பதிவு எண், பிறந்ததேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் மாணவர்கள் பார்க்கலாம்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை பிளஸ் 1 தேர்வுகள் நடந்தது. 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதேபோல் 27ம் தேதி மறு தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கும் இன்று முடிவுகள் வெளியிடப்படுகிறது.


மதிப்பெண் அட்டவணை

அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களது மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இன்று காலை 9.50 மணி முதல் www.dge.tn.in என்ற இணையதளத்தில் இருந்து தங்கள் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல்

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மதிப்பெண் எப்படி

முன்னதாக பிளஸ்-1 பொதுத்தேர்வின் இறுதிநாள் தேர்வு கொரோனா லாக்டவுன் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் இறுதி நாள் தேர்வுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது.

Post a Comment

0 Comments