ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியில் கிரிமினல்: கொரோனா பாதித்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கொந்தளிக்கும் கேரளா!
எத்தைனையோ ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இந்த கொரோனா காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். கொரோனா தாக்கி பல ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர். தன்னலமற்று இப்படி பணி புரியும் ஓட்டுநர்களுக்கு மத்தியில், கேரளாவில் கொரோனா பாதித்த இளம்பெண் ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதித்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கொந்தளிக்கும் கேரளா!
கேரளாவில் பத்தனம் திட்டா அருகேயுள்ள பந்தளம் பகுதியை சேர்ந்த கொரோனா பாதித்த இரு பெண்களை சனிக்கிழமை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் . அதில் 20 வயது இளம் பெண்ணும் ஒருவர் .இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே கொரோனா பாதிப்பு இருந்ததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உறவினர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சனிக்கிழமை இரவில் பந்தளம் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஆம்புலன்ஸை டிரைவர் நவுஃபல் (வயது 29),என்பர் ஓட்டி சென்றுள்ளார். கோழச்சேரி என்ற இடத்தில் ஒரு பெண்ணை சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். மற்றோரு பெண்ணை பந்தளம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் கூறியுள்ளனர். அங்கிருந்து 10 நிமிட பயண நேரத்தில்தான் பந்தளம் மருத்துவமனை உள்ளது. அப்போது, ஆம்புலன்ஸில் வேறு எந்த ஊழியர்களும் இல்லை. இரவு 10 மணியளவில் ஆம்புலன்ஸ் டிரைவருடன் கொரோனா பாதிப்புக்குள்ளான இளம் பெண் தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனால், திட்டமிட்டே வேறு பதையில் ஆம்புலன்ஸை ஓட்டி டிரைவர் ஆரன்மூலா என்ற இடத்தில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
0 Comments