உன்னதமான மனிதரை இழந்துவிட்டோம்…என் பிறந்தநாளை நான் எப்படி கொண்டாட முடியும்.. வடிவேலு உருக்கம் !

 


பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவை போலவே அனைவரையும் தனது திறமையால் உடல் அசைவுகளாலும் முகத்தாலும் சிரிக்க வைத்தவர் தான் வடிவேலு பாலாஜி.


வடிவேலுவை போலவே இருப்பதால் இவரை அனைவரும் வடிவேலு பாலாஜி என்றே செல்லமாக அழைக்கத் தொடங்கி விட்டனர்.


செயல் இழந்த உறுப்புக்கள்

கடந்த 15 நாட்களுக்கு முன்பு நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேலு பாலாஜி, மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் பொழுதே கைகால்களும் செயல் இழந்ததாகவும் கூறுகின்றனர்.


பலன் இல்லாமல் போனது

பல மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்ட வடிவேலு பாலாஜி ,நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு மனைவி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் இறந்த செய்தியைக் கேட்ட அனைவரும் பேர் அதிர்ச்சியிலும் ,ஆழ்ந்த தூக்கத்திலும் மூழ்கியுள்ளனர்.


அழ வைத்து விட்டார்

அனைவரையும் சிரிக்க வைத்த மனிதன் இன்று அனைவரையும் அழ வைத்து போய் விட்டாரே என்று சொல்லாத ஆட்களே கிடையாது. அந்த குழந்தைகள் தன் தந்தையின் முகத்தைப் பார்த்து அழும் காட்சியை பார்த்த அனைவரும் சுக்குநூறாக உடைந்து போய் உள்ளனர் .


ஆனாலும் பலனில்லை

பல சினிமா நட்சத்திரங்களும், தொலைக்காட்சியில் அவருடன் வேலை செய்யும் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் அவர்களது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருவதுடன், தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். குழந்தைகளின் படிப்புச் செலவை முழுமையாக ஏற்றுக்கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.


நெஞ்சம் பதறுது

நடிகர் வடிவேலு பாலாஜியின் உடலைப் பார்த்தவர்கள் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் அனைவரும் நெஞ்சில் துடித்து அழுது கொண்டிருக்கின்றனர். வடிவேலுவின் நடை, உடை, பாவனைகளை கொண்டுள்ள வடிவேல் பாலாஜி இறந்த செய்தி கேட்டு நடிகர் வடிவேலு தனது இரங்கல் செய்தியை வெளியிட்டார்.


ஆழ்ந்த இரங்கல்

தனது சாயலில் இருக்கும் ஒரு உன்னதமான நல்ல மனிதரை இழந்துவிட்டோம் என்று வடிவேலுவும் உருக்கமாக பதிவை கொடுத்துள்ளார். நாளை வடிவேலுவின் பிறந்தநாள்,அவரது சாயலில் இருக்கும் ஒரு நல்ல மனிதன் இறந்த பிறகு , எப்படி பிறந்த நாளை நாம் கொண்டாட முடியும் என்றும், இந்த வருடம் பிறந்தநாள் கொண்டாட்டம் எதுவும் கிடையாது என்றும் வருத்தத்தோடு வடிவேலு ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


Post a Comment

0 Comments