சிறுமியை பல நாட்களாக நாசம் செய்த டிவி சேனல் ஊழியர்கள் .. வைரலாகும் சேனல் ஓனர்- தாயார் உரையாடல்

 


புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவேனஸ்வரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஓடிவியின் நிர்வாக இயக்குனரும், பாஜக தலைவர் பைஜயந்த் பாண்டாவின் கணவருமான ஜாகி பாண்டாவிற்கும், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கும் இடையே நடந்ததாக கூறப்படும் தொலைப்பேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் புவேனஸ்வரை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது ஓடிவி. இந்த டிவியின் நிர்வாக இயக்குனராக உள்ளவர் ஜாகி பாண்டா. இவரது மனைவி பாஜக தலைவராக உள்ளார். இந்நிலையில் ஒடிவியில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு சிறுமியை ஏப்ரல் மற்றும் மாதங்களில் சுமார் 15 நாட்கள் வைத்து பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.


டிவி சேனல் ஊழியர்கள்

பாதிக்கப்பட்டவரின் தாயார், சேனலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் அளித்த புகாரில் ஏப்ரல்-மே மாதங்களில் என் மகளை சேனலில் வேலை பார்ககும் பல ஊழியர்கள் சுமார் 15 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். என் மகளின் கைகளையும் கால்களையும் கட்டி வைத்து இந்த கொடூரத்தை அவர்கள் செய்திருக்கிறர்கள்.


மிரட்டி ஊழியர்கள்

அத்துடன் நடந்த சம்பவம் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்கள். அத்துடன் அதை இணையத்தில்விட்டுவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்கள். மேலும் பலாத்காரம் செய்ததை வெளியில் சொன்னால் மகளையும் தன்னையும் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள் . இதனால் நடந்த விஷயத்தை அந்த செய்தி சேனல் எம்.டி.க்கு தெரிவித்தேன். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் வழக்கு தொடர வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தார்" என்று கூறினார்,


போஸ்கோ சட்டத்தில் வழக்கு 

இந்த புகாரை ஏற்று போக்ஸோ சட்டத்தின் 19, 20, மற்றும் 21 பிரிவுகளின் கீழ் மற்றும் ஐபிசி சட்ட விதிமுறைகளின் கீழ் ஓடிவியின் நிர்வாக இயக்குனர் ஜாகி பாண்டா மற்றும் ஊழீயர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே கலெக்டர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை 48 மணி நேரத்திற்குள் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்குமாறு ஒடிசா மாநில குழந்தைகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.


டிவி சேனல் ஒனர் உரையாடல் 

இதனிடையே பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரும், ஓடிவி நிர்வாக இயக்குனர் ஜாகி பாண்டாவும் தொலைப்பேசியில் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைலாகி வருகிறது. அந்த உரையாடலில், தனியார் சேனலின் எம்.டி, மைனர் சிறுமியை அலுவலகத்திற்கு அழைத்து வரும்படி அவரது அம்மாவிடம் கேட்கிறார். அப்போது சிறுமியின் தாயார், தன் மகளை நாசம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கிறார். இப்படியாக உரையாடல் இருக்கிறது. சிறுமியை டிவியில் பணியாற்றும் ஊழியர்கள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Post a Comment

0 Comments