"பாசமே கிடைக்கல.. அதான் தண்ணி தொட்டிக்குள்ள.. தங்கச்சி பாப்பாவை".. போலீசையே மிரள வைத்த 5 வயது சிறுமி

 


பாசமே கிடைக்கவில்லை.. தனக்கு கிடைத்து வந்த எல்லா அன்பும் தன்னுடைய 11 மாதமான தங்கைக்கு கிடைக்கவும் வயது குழந்தைக்கு ஆத்திரம் வந்துவிட்டது.. அதனால், 11 மாத தங்கையை தண்ணிர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்றே விட்டாள்.


 இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள்.. முதல் குழந்தை நிர்மலா.. 5 வயதாகிறது.. 2வது குழந்தை ஹேமஸ்ரீ... 11 மாசம்தான் ஆகிறது.


2வது குழந்தை பிறந்ததில் இருந்து பெற்றோர், நிர்மலாவிடம் சரியாக பாசம் காட்டவில்லை என்று தெரிகிறது.. அவ்வளவு நாள் தனக்கு இருந்த முக்கியத்துவம், தங்கை பிறந்ததும் குறைந்துவிட்டதையும் நிர்மலா உணர்ந்துள்ளாள். இந்த சமயத்தில்தான் 2 நாளைக்கு முன்பு பக்கத்து வீட்டில் தூங்க வைக்கப்பட்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போயுள்ளது...


 இதனால் பெற்றோர் அக்கம்பக்கம் முழுவதும் குழந்தையை தேடினர்.. கிடைக்கவே இல்லை.. அப்போதுதான் பக்கத்துவீட்டின் மொட்டைமாடியில் உள்ள தண்ணி டேங்கில் குழந்தை மூழ்கிய நிலையில் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ந்தனர்.


அதுகுறித்து, ஸ்ரீகாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. அவர்களும் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர்.. அக்கம்பக்கம் இருந்த எல்லாரிடமும் துருவி துருவி விசாரணை நடந்தது.. அப்போது, 5 வயது நிர்மலாவிடமும் விசாரித்தனர்.. அப்போதுதான் அவள் சொன்னதை கேட்டு எல்லாருக்கும் தூக்கி வாரி போட்டது. "என் தங்கச்சி பிறந்ததும் என் அம்மாவும், அப்பாவும் என்கிட்ட பாசமாவே இல்லை.. 


அதான் தங்கச்சியை எடுத்து தண்ணி தொட்டிக்குள் போட்டுட்டேன்" என்று சொன்னதை கேட்டு மிரண்டு நின்றனர். இதை கேட்டு என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்த போலீசார் உடனடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.. இறுதியாக சிறுமி மீது வழக்கு பதிவு செய்தனர்... இப்போது இந்த வழக்கு கோர்ட்டுக்கு செல்லவுள்ளது. 5 வயது குழந்தை, 11 மாத குழந்தையை கொன்றது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..


 குழந்தை பிறந்ததுமே தங்கள் மீதான பாசம் திடீரென குறைந்துவிடுவதாக மூத்த குழந்தைகள் உணர்கிறார்கள்... இதை வெளிப்படையாகவே சில பெற்றோர்கள் செய்கிறார்கள்.. மனநல, உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதுடன், இப்படிப்பட்ட பயங்கரமான விபரீதத்திலும் கொண்டு போய்விட்டுவிடும் என்பதற்கு உதாரணம் இது!




Post a Comment

0 Comments