பூமியை நோக்கி மணிக்கு 38,624 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் ராட்சத விண்கல்.

 



பூமியை நோக்கி ராட்சச விண்கல் ஒன்று மணிக்கு 38ஆயிரத்து 624 கிலோ மீட்டர்  வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல் அளவில் பெரியது என்றும் கிட்டத்தட்ட இரண்டு கால்பந்தாட்ட மைதானங்களை சேர்த்தது போன்ற அளவுடையது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த பாதிப்பில்லை என்றும் இது செப்டம்பர் 14ம் தேதி  பூமியைக் கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல விண்கற்கள் கடந்து செல்வதாகவும், அடுத்த 100 ஆண்டுகளில் பூமியின் மீது விண்கல் மோதும் அச்சுறுத்தல் இல்லை என்றும் சமீபத்தில் நாசா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments