NEET & JEE தேர்வர்களுக்காக சிறப்பு பேருந்து இயக்க தமிழக அரசு திட்டம்

 
NEET & JEE தேர்வர்களுக்காக சிறப்பு பேருந்து இயக்க தமிழக அரசு திட்டம்

Add caption


நீட் மற்றும் ஜேஇஇ ஆகிய அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் வசதிக்காக, தமிழகத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் மருத்துவப்படிப்பு நுழைவுத் தேர்வான நீட் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ ஆகியவை நடைபெறவுள்ளன.

அந்த தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, சிறப்பு பஸ்களை தமிழக அரசு இயக்க முடிவெடுத்துள்ளது. இதற்கான அதிகராப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments