தமிழகத்தில் நவம்பர் முதல் பள்ளிகள் திறப்பா? பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்!!

தமிழகத்தில் நவம்பர் முதல் பள்ளிகள் திறப்பா? பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்!!




தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியத் துவம் அளிக்கும் வகையில் வரும் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித் துறைத் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து வகை கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கு இப்போதைக்கு சாத்தியமில்லை என்ற சூழலே நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

 இதனிடையே, தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் பாடம் நடத்துவதற்கான திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்ற முறையான அறிவிப்பு தற்போது வரையில் வெளியாகாமல் இருந்து வருகிறது. 

தற்போது, அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து வரும் திங்கட்கிழமை தமிழக முதலமைச்சர் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments