ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் போதும்: ஏடிஎம் உங்க வீட்டுக்கே வரும்- எப்படி தெரியுமா?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதுமுறை சேவை ஒன்றை அறிவித்துள்ளது. அதில் ஒரே ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினால் போதும் ஏடிஎம் வீட்டுக்கே தேடிவரும் என அறிவித்துள்ளது.
ஏடிஎம் இயந்திரங்கள் வீடு தேடி வரும்
ஏடிஎம் இயந்திரங்கள் வீடு தேடி வரும் என்றால் நம்ப முடிகிறதா. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை அறிவித்துள்ளது. ஒரே ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் செய்தாலே போதுமானது, வங்கி ஏடிஎம் இயந்திரத்தை வீட்டிற்கே அனுப்பி வைக்கும் என தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு
SBI (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா) தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது மொபைல் ATM இயந்திரங்களை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. SBI வங்கி வாடிக்கையாளர்களின் கோரிக்கையின் பேரில் அவர்களது வீட்டு வாசலுக்கே ATM-களை வரவழைக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினால் போதும்
வாடிக்கையாளர்கள் வங்கிக்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினால் போதும். வங்கி ATM இயந்திரத்தை வீட்டின் முன் கொண்டு வரும் என வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. மொபைல் ATM வீட்டிற்கு வரவழைக்க வங்கியை அழைக்கலாம் எனவும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது. SBI இந்த புதிய சேவையை லக்னோவில் அறிமுகப்படுத்தியுள்ளது
ரூ.3 ஆயிரம் இருப்புத் தொகை
பொதுவாக எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 3 ஆயிரம் ரூபாய் கணக்கில் பணம் வைத்திருக்காது வாடிக்கையாளர்களுக்கு இருப்புத் தொகைக்கு ஏற்ப பணம் வசூலிக்கப்பட்டது.
கட்டணம் செலுத்த வேண்டியதில்லை
இந்த நிலையில் இனி எஸ்பிஐ வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்
அதேபோல் வாடிக்கையாளர்களின் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வழங்கப்பட்டு வந்த சேவைக்கு பணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த சேவைக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை வங்கி ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.



0 Comments