ரஜினிகாந்தை தொடர்ந்து இன் டு தி வைல்டு நிகழ்ச்சியில் அக்ஷய் குமார்.. ஒளிபரப்பு எப்போ தெரியுமா?
பியர் கிரில்ஸ் உடன் அக்ஷய் குமார் கலந்து கொண்ட இன் டு தி வைல்டு டிவி நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி கலந்து கொண்ட மேன் வெர்சஸ் மோடி நிகழ்ச்சி 3.69 மில்லியன் பதிவுகளை பெற்ற நிலையில், ரஜினிகாந்தின் இன் டு தி வைல்டு நிகழ்ச்சி 4 மில்லியன் இம்பிரஷன்களை பெற்றது.
இந்நிலையில், தற்போது, அக்ஷய் குமார் மற்றும் பியர் கிரில்ஸ் காட்டில் செய்யும் சாகசங்கள் விரைவில் ரசிகர்களின் பார்வைக்கு வரவிருக்கிறது.
பியர் கிரில்ஸ் உடன் ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், முதன்முறையாக சின்னத்திரையில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் பியர் கிரில்ஸின் சாகச நிகழ்ச்சியான In To The Wild நிகழ்ச்சியில் பங்கேற்றார். கர்நாடகாவில் உள்ள பந்திப்பூரா புலிகள் சரணாலயத்தில் சில மாதங்கள் முன்னதாக நடந்த இந்த நிகழ்ச்சி, கடந்த மார்ச் 23ம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது.
4 கஷ்டமான டாஸ்க்குகள்
முதன் முறையாக டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், சும்மா பேசிக் கொண்டு இருக்காமல், காட்டில் இறங்கி 4 பெரிய டாஸ்க்குகளை செய்து அசத்தினார். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மிகப்பெரிய டி.ஆர்.பி ரேட்டிங்கை டிஸ்கவரி சேனலுக்கு பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது
பாலிவுட் கில்லாடி
இந்நிலையில், தற்போது பாலிவுட் கில்லாடி அக்ஷய் குமார், பியர் கிரில்ஸ் உடன் காட்டில் செய்த சாகச நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஸ்கவர் சேனல் தற்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அறிந்த பாலிவுட் ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஒளிபரப்பு எப்போது
#IntoTheWildWithBearGryllsAndAkshayKumar என்ற ஹாஷ்டேக்குடன் தற்போது பியர் கிரில்ஸ் மற்றும் அக்ஷய் குமார் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. வரும் செப்டம்பர் 14ம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்கவரி சேனலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments