சூரரைப் போற்று படத்தை அடுத்து.. ஒடிடி-யில் ரிலீஸ் ஆகும் தனுஷ், விஜய் சேதுபதி, சந்தானம் படங்கள்!
சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை அடுத்து நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி, சந்தானம் ஆகியோர் படங்கள் ஓடிடியில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
சூரரைப் போற்று இதனால், தயாரித்து முடித்தப் படங்களை டிஜிட்டலில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படமும் கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் படமும் அமேசான் பிரைமில் வெளியாயின. மேலும் சில படங்கள் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகின. இந்நிலையில், நடிகர் சூர்யா, தனது சூரரைப் போற்று படத்தை ஓடிடி-யில் வெளியிடுவதாக அறிவித்தார்.
தியேட்டர்கள் அதிபர்கள்
இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒடிடியில் வெளியாகும் பெரிய ஹீரோ படம் இது என்பது இந்தப் பரபரப்புக்கு காரணம். இதற்கு தியேட்டர்கள் அதிபர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தவறான முடிவை சூர்யா எடுத்துவிட்டார் என்று புகார் கூறினர். நடிகர் சூர்யாவின் முடிவை அடுத்து மேலும் பல படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.
தனுஷின் ஜகமே தந்திரம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். பிரேவ் ஹார்ட், தி கிரோனிக்கல்ஸ் ஆப் நார்னியா, கேம்ஸ் ஆப் த்ரோன் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்த ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடிக்கிறார். மற்றும் கலையரசன் உள்பட பலர் நடிக்கின்றனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் சஷிகாந்த் தயாரித்துள்ள இந்த படத்தை ஒடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
கிட்டத்தட்ட டிஜிட்டல் ரிலீஸ் உறுதியாகிவிடும் என்று கூறப்படுகிறது. பெ.விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி நடித்துள்ள படம், க/பெ. ரணசிங்கம். இந்தப் படத்தையும் ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விஜய் சேதுபதி இதில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
சந்தானத்தின் டிக்கிலோனா
சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம், டிக்கிலோனா. கார்த்திக் யோகி இயக்கி உள்ள இந்தப் படத்தின் டிரைலருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தையும் ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். க/பெ ரணசிங்கம், டிக்கிலோனா படங்களை ஜீ 5 நிறுவனம் வாங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இந்தப் படங்களின் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


0 Comments