சுரேஷ் ரெய்னாவின் மாமா அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழப்பு

 

சுரேஷ் ரெய்னாவின் மாமா அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழப்பு



சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.

ஐபிஎல் தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற ரெய்னா, திடீரென நேற்று இந்தியா திரும்பினார். முதலில் சொந்த காரணங்களுக்காக அவர் நாடு திரும்பியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது உண்மை காரணம் தெரிய வந்துள்ளது.

கடந்த 19ம் தேதி ரெய்னாவின் அத்தை குடும்பத்தினர் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயமடைந்த அவரது மாமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது அத்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குடும்பத்தில் மேலும் இருவரும் காயமடைந்துள்ளனர். குடும்பத்தில் நடந்த இந்த துயரமே ரெய்னா ஊர் திரும்பியதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments