இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும்-யுஜிசி உறுதி

 

இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும்-யுஜிசி உறுதி



பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணாக்கர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக பல்கலைக்கழக மானியக் குழு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா பேரிடரை கருத்தில்கொண்டு, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. UGC எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார்.

படிப்புகளை முடித்தவர்களுக்கு பட்டங்கள் வழங்குவதற்கான விதிகளை யுஜிசி மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும், மாநில அரசுகள் இந்த விதிகளை மாற்றியமைக்க முடியாது என்றும் அவர் கூறினார். தேர்வுகளை நடத்தாமல் இருப்பது மாணவர்களுக்கு நன்மை தரும் முடிவு அல்ல என்றும் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

For More News:Click

Post a Comment

0 Comments