விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை முகாமில் தீ விபத்து : மூச்சுத் திணறல் காரணமாக நோயாளிகள் 7 பேர் உயிரிழப்பு

 

விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை முகாமில் தீ விபத்து : மூச்சுத் திணறல் காரணமாக நோயாளிகள் 7 பேர் உயிரிழப்பு


ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தனியார் ஓட்டலில் செயல்பட்டு வந்த கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

சொர்ணா பேலஸ் எனும் அந்த விடுதியில் அதிகாலையில் மின்கசிவால் ஏற்பட்ட விபத்தால், உள்ளே இருந்த 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அலறியடித்து வெளியேறியுள்ளனர்.

இதில் புகை மூட்டத்தால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக 7 பேர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோர் அருகே இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments